தூத்துக்குடி வெஜிடபிள் மார்க்கெட்டிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் பங்குதாரரும், முன்னாள் இயக்கநருமான P.T பொன்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுறுப்பதாவது; தூத்துக்குடி வெஜிடபிள் மார்க்கெட்டிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பங்குதாரராக P.T.பொன் ராஜ்-ஆகிய நான் இருந்து வருகிறேன்.. மேற்படி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனருமாவேன்..
இந்நிலையில், தூத்துக்குடி வெஜிடபிள் மார்க்கெட்டிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக சி.த சுந்தரபாண்டியன் பணியாற்றி வந்தார்.. சி. த சுந்தரபாண்டியன் 30.10.2023 அன்று காலமானார்.. அதன் பிறகு மேற்படி தூத்துக்குடி வெஜிடபிள் மார்க்கெட்டிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது தலைவர் இல்லாத நிலையில் செயல்பட்டு வருகிறது…
புதிதாக தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டியது பங்குதாரர்களின் அடிப்படை கடமையாகும். எனவே 18.11.2023 தேதியன்று தூத்துக்குடி மீனாட்சிபுரம் 1வது தெருவில் உள்ள ஹோட்டல் கருணாஸ்-ஸில் வைத்து பங்குதாரர்கள் கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதால் மேற்படி 18.11. 23 தேதி என்று காலை 11 மணிக்கு பங்குதாரர்கள் அனைவரும் நேரில் ஆஜராகி மேற்படி தூத்துக்குடி வெஜிடபிள் மார்க்கெட்டிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்….