தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டு படகு மீனவர்களுடன் கடந்த 3ம் தேதி தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன் ராஜ் கூட்டம் நடத்தியுள்ளார்.. அந்த கூட்டத்தில், மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன் ராஜ் தெரிவிக்கையில், மீன்பிடி படகுகளுக்கு லைசன்ஸ் வேண்டும், ஒரு படகில் நான்கு மீனவர்களுக்கு மேல் மீன் பிடிக்க செல்லக் கூடாது, மீன்பிடி படகுகளுக்கு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் இன்சூரன்ஸ் கட்ட வேண்டும், நாட்டு படகு மற்றும் பைபர் படங்களுக்கு பச்சை வண்ணம் பூச வேண்டும், படகில் பயன்படுத்தப்படும் இஞ்ஜினுக்கு ஜிஎஸ்டி பில் வேண்டும், படகை புதிதாக செய்ததற்கான ஜிஎஸ்டி பில் வழங்க வேண்டும் இந்த சான்றுகளை வழங்கும் படகுகளுக்கு மட்டுமே டீசல் மானியம் வழங்கப்படும் எனக் கூறினாராம்.. இது மீனவர்களுக்கு எதிராக உள்ளது என்று அந்த கூட்டத்திலேயே மீனவர்கள் கூறியுள்ள நிலையில் இப்படி தான் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறி மீனவர்களை வெளியே போங்கள் என்று கூறினாராம்.
மேலும், மீனவர்களை மரியாதை குறைவாக நடத்தினாராம்.. ஆகவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேம்பார் முதல் பெரியதாழை வரை 5,800-க்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் மீன்வளத் துறை உதவி இயக்குனர் மோகன் ராஜை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என இன்று ஒருநாள் 06.11.2023 தொழிலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத போராட்டத்தில் ஈடுபட்டனர்…
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், ஆகியோரை மீனவர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.. அப்போது அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீனவர்களை மரியாதை குறைவாக நடத்தியதாக கூறப்படுகிறது… ஆகவே அமைச்சரின் பேச்சை கண்டித்தும், மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ் விரைவாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனவும் மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்…
இதுகுறித்து நாட்டுப்படகு மீனவர்கள் சங்கச் செயலாளர் ரீகன் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 5,800 நாட்டுப்படகுகள் உள்ளது. தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ் என்பவர் மீனவர்களை அவமதிப்புடன் நடத்தி வருகிறார்.. மீனவர்களுகக்குண்டான தேவையை தேடி சென்றால் மரியாதை குறைவாக நடத்துகின்றார்.. கடந்த 3ம் தேதி மீன்வளத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் எங்கள் கோரிக்கைகளை ஏற்காமலே வெளியே செல்லுங்கள் என்று அவமரியாதையாக கூறினார்.. ஆகவே, இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி மற்றும் அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் இல்லத்தில் அமைச்சர் ஆகியோரை சந்தித்து மீனவர்கள் மனு அளித்தோம்.. அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மீனவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, அமைச்சர் மோகன்ராஜை மாற்ற முடியாது.. எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஓட்டு போட ஆள் இருக்கிறது.. உங்கள் ஓட்டு தேவையில்லை என்று கூறினாராம்… ஆகவே, அமைச்சர் பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு இந்த ஒரு நாள் போராட்டம் காலவரையற்ற போராட்டமாக நீடிக்கும் என்றார்..
மேலும், இதுபோன்று அதிகாரிகள் மாற்றம் செய்யக்கோரி இதுவரை போராடியதில்லை. இவரை மாற்றம் செய்யக்கூடிய முதல் முறை போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது…