Thupparithal
செய்திகள்

தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு கோவில்பட்டி அருகே முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஸ், தலைமையில் மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயக ரமேஷ் முன்னிலையில் முத்துராமலிங்கத் தேவர் திரு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணை செயலாளர் கோடையடி ராமச்சந்திரன், மதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கேசவ நாரயணன், மாவட்ட பிரதிநிதி முத்துப்பாண்டி, நகர துணை செயலாளர் வனராஜன், கிளை செயலாளர்கள் செண்பகராஜ், நாகராஜ், அரியப்பன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை மத்திய பகுதி ஒன்றிய செயலாளர் சரவணன் செய்திருந்தார்.

Related posts

தூத்துக்குடியில் நாளை(19.11.2022) வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

Admin

காற்றாலை நிறுவனங்களை கண்டித்து ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் 25 ஊராட்சிகள் கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு; பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு!.

Admin

தூத்துக்குடி அமமுக மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் ஜெயலலிதாவின் 6 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!.

Admin

Leave a Comment

error: Content is protected !!