தூத்துக்குடி காமராஜர் காய்கனி மார்க்கெட் தலைவரும், தொழில் அதிபருமான சி.த.சுந்தரபாண்டின் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.
இவர் சண்முகபுரம் ஆலய திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஞானராஜின் தந்தையும், முன்னாள் அதிமுக அமைச்சர் சித செல்லப்பாண்டியனின் அண்ணனும் ஆவார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர், உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இறுதிச்சடங்கு நாளை மாலை 4:30 மணிக்கு சண்முகபுரம் பரி. பேதுரு ஆலயத்தில் வைத்து நடைபெற்று, பின்பு, துறைமுகம் சாலையில் உள்ள மீன்வளகல்லூரிக்கு பின்புறம் உள்ள ராஜி கார்டனில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது…