தூத்துக்குடியில் பனைத் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போடும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்டத் தலைவர் ரவி சேகர், நிர்வாகிகள் மற்றும் பனைத் தொழிலாளர்ளின் குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் “பனை ஏறி பதனீர் இறக்கி தொழில் செய்து வரும் நாடார் மக்களை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் கஷ்டப்படுத்தி அவர்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 10ஆம் தேதி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அன்பு மற்றும் சீனிவாசன் ஆகியோர் மீது ஊமத்தங்கொட்டை கலந்து கள் இறக்கியதாக பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாதம் 10 வழக்கு கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக இந்த வழக்குகளை போட்டுள்ளதாக போலீசார் கூறிகின்றனர். எனவே பனைத் தொழிலாளர்கள் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்து அவர்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.