Thupparithal
செய்திகள்

நீச்சல் குறித்து விழிப்புணர்வு; நீச்சல் குளத்தில் மிதந்தவாறு 7 மணி நேரம் 30 நிமிடங்கள் மிதந்து குளோபல் உலக சாதனை படைத்து கலக்கிய சிறுவன்!.

தூத்துக்குடி, பிரையண்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண பிரபு, தேவி இத்தம்பதியரின் மகன் ஹர்சன் (9), தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வரும் இச்சிறுவன் மூன்று வயது முதலே நீச்சல் பயிற்சி பெற்றுள்ளான். இந்நிலையில், நீச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீச்சலில் மிதப்பதற்கான உலக சாதனை முயற்சி செய்ய முடிவு செய்துள்ள நிலையில், நேற்று தூத்துக்குடியில் உள்ள கேம்ஸ்-வில் நீச்சல் குளத்தில் குளோபல் உலக சாதனை நிறுவனம் சார்பில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.

இதில், மாணவன் ஹர்சன் காலை 10 மணி முதல் தொடர்ந்து மிதந்தவாறு மிதப்பதற்கான உலக சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இதில், தொடர்ந்து நீச்சல் குளத்தில் மிதந்தவாறு 7 மணி நேரம் 30 நிமிடங்கள் 20 வினாடிகள் தொடர்ந்து மிதந்து குளோபல் உலக சாதனை நிறுவன சாதனையில் இடம் பிடித்தார். சாதனை முடித்து வெளியே வந்த சிறுவனை பெற்றோர், பயிற்சியாளர்கள் பாராட்டினர்.

இதைத்தொடர்ந்து, சாதனை சிறுவன் ஹர்சனை தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுரேஷ் மற்றும் குளோபல் உலக சாதனை நிறுவனம் சார்பில் பாராட்டப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

Related posts

வ உ சி-யின் 86 வது நினைவு தினம் – இளைஞர் காங்கிரஸ் பெருமாள்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!

Admin

மார்ச் 21 காடுகள் தினம்; தூத்துக்குடியில் மாணவ, மாணவிகளின் கை வண்ணத்தில் அழகிய சுவரோவியம்;

Admin

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியியல் இருந்து கட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்களை மார்கண்டேயன் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!