Thupparithal
செய்திகள்

நெடுஞ்சாலைத்துறையின் அலட்சிய போக்கு – தாளமுத்துநகர் பிரதான சாலையை சீரமைக்க கோட்டப்பொறியாளருக்கு ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியான தாளமுத்துநகர் பிரதான சாலைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து தரக் கோரி மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் ஆறுமுகநயினாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், கூறியிருப்பதாவது: தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட தாளமுத்து நகர் மெயின் சாலையில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை பணிகள் பாதி முடிவடைந்த நிலையில் பணிகள் நடைபெறாமலும், மிகவும் மோசமான நிலையில் சிதிலமடைந்தும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையிலும் உள்ளதால் அதனை ஆய்வு செய்து சீரமைக்குமாறு இருமுறை கடிதங்கள் நெடுஞ்சாலைத்துறை தூத்துக்குடி கோட்டப் பொறியாளர் ஆறுமுகநயினார் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க பணிகளை விரைந்து செய்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக கோட்டப்பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை அவர்களிடமிருந்து 5.5.2023 நாளிட்ட கடிதம் மூலம் தகவல் பெறப்பட்டது.

ஆனால் கடிதம் பெறப்பட்டு 30 தினங்களுக்கு மேல் ஆகியும் ஒப்பந்ததாரர் நாளது தேதி வரையிலும் எந்தவிதமான பணிகளையும் மேற்கொள்ளவில்லை. இப்பணிக்கான ஒப்பந்தக்காரர் யார் என்பதை தெரிவிக்காமல் அறிவுறுத்தல் கடிதம் மூலம் தகவல் மட்டும் தெரிவித்து விட்டு பணிகளை மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டு இருப்பது, பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, மேற்படி பணிகளை 15 தினங்களுக்குள் தொடங்காவிடில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் ஆகியோர்களுக்கு, தங்களது நிர்வாக பணி குறித்த அலட்சியப் போக்கினை சுட்டிக்காட்டி மாப்பிள்ளையூரணி ஊராட்சியின் 15 வார்டு உறுப்பினர்கள் சார்பாகவும், மாப்பிள்ளையூரணி பொதுமக்கள் சார்பாகவும் நேரடியாக புகார் அளிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட தாளமுத்துநகர் மெயின் சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியப் போக்கினால் கிடப்பில் போடப்பட்ட பேவர் பிளாக் சாலை பணியினை போர்க்கால அடிப்படையில் அமைத்து தர வேண்டும் என்று அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

Related posts

கோவில்பட்டி அருகே நாடார் மகாஜனம் சார்பில் ஐ.ஏ.எஸ் அகாடமி திறப்பு விழா- நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கறிக்கோல்ராஜ் பங்கேற்று திறந்து வைத்தார்.

Admin

தூத்துக்குடி அருகே, மின் சிக்கன விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.

Admin

தூத்துக்குடியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!

Admin

Leave a Comment

error: Content is protected !!