தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், தூத்துக்குடி நகர் கோட்டம், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தூத்துக்குடி, ஒட்டப்பிடார சட்டமன்றம் மாப்பிள்ளையூரணி கிராமத்தில் இன்று (08.11.2022) தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமையில், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் முன்னிலையில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டார்.
பின்னர், தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை சிறப்பாக நடத்தி கொண்டு இருக்கும் மின்வாரிய அலுவலக பணியாளர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் அவர் கூறுகையில், இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டமானது மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று இருப்பதாகவும், இந்த கூட்டத்தில் பொது மக்கள் தங்கள் குறைகளை கூறி உடனடி தீர்வு காணலாம் என்றும், இந்த கூட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க கூடிய மின்வாரிய அதிகாரிகள், பணியாளர்கள், மற்றும் ஊர் பொது மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில், கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, சுற்று சூழல் அணி ரவி (எ) பொன்பாண்டி, இளைஞரணி கௌதம், செயற்பெறியாளர் ராம்குமார், உதவி செயற்பொறியாளர்கள் பிரேம், ஆறுமுகம், முருகப் பெருமாள்,மற்றும் மின்வாரிய ஊழியர்கள், மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.