Thupparithal
செய்திகள்

ஸ்ரீ மூலக்கரையில் 1.053 கோடி மதிப்பீட்டில் 16 மெகாவாட் திறன் கொண்ட மின்மாற்றி திறப்பு – முதல்வருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்!

ஸ்ரீ மூலக்கரை துணை மின் நிலையத்தில் 1.053 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 16 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் நேற்று (07.11.2022) திறந்து வைத்தார். இதன் மூலம் 50 கிராமங்களுக்கு சீரான மின் சப்ளை கிடைக்கும்.

அதனை தொடர்ந்து, துணை மின் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், பஞ்சாயத்து தலைவர்கள் சாதிக் அலி (ஸ்ரீ மூலக்கரை) சித்திரைப் பாண்டியன் (அணியாபுரம் நல்லூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மின் மாற்றியை இயக்கி வைத்து மரக்கன்றுகளை நட்டினார்.

புதியதாக நிறுவப்பட்டுள்ள இந்த புதிய மின்மாற்றி மூலமாக ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், மற்றும் திருச்செந்தூர், ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 50 கிராமங்களில் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகளில் உள்ள 24 ஆயிரத்து 300 மின் இணைப்புகளுக்கு சீரான மின் விநியோகம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று (08.11.2022) தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா, மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

இதில், தெற்கு மாவட்ட மதிமுக மாணவரணி துணை செயலாளர் சரவணப்பெருமாள் கலந்து கொண்டு ஸ்ரீ மூலக்கரை கிராமத்திற்கு 1 கோடி மதிப்பீட்டில், 16 மெகாவாட் திறன் கொண்ட மின் மாற்றி அமைத்துத் தந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்தும், அதற்கு உறுதுணையாக இருந்த தூத்துக்குடி மேற்பார்வை பொறியாளர் குருவம்மாளுக்கும், மின் வாரிய உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும், ஸ்ரீ மூலக்கரை கிராம மக்கள் மற்றும் தெற்கு மாவட்ட மதிமுக சார்பாக சால்வை கொடுத்து நன்றி தெரிவித்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், மதிமுக மாநில மீனவர் அணி செயலாளர் நக்கீரன், கலை இலக்கிய அணி துணை செயலாளர் மகாராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட சண்முகபுரம் பகுதி செயலாளர் பொன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

சொத்து குவிப்பு வழக்கு; அமைச்சர் கீதாஜூவன் மற்றும் அவரது குடுமபத்தினர் 6-பேர் விடுதலை தூத்துக்குடி முதன்மை நீதிமன்றம் உத்தரவு!.

Admin

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தனியார் நிறுவனத்திற்கு கட்டிட வேலை சம்பந்தமாக ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் தர வேண்டும்; தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவரால் பரபரப்பு!.

Admin

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் ஊராட்சியில் 10 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

Admin

Leave a Comment

error: Content is protected !!