லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு, இலவசமாக மோடம் ‘ வழங்கி , பைபர் நெட் திட்டத்தில், இணைக்க, பி .எஸ்.என்.எல்., நிர்வாகிகள் முயன்று வருகின்றனர்.
இது குறித்து பி.எஸ்.என்.எல்
அதிகாரிகள் கூறியதாவது; பி.எஸ்.என்.எல்., லேண்ட்லைன் இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்களை, பைபர் நெட் திட்டத்திற்கு மாற்ற முயற்சித்து வருகிறோம் . அதற்கேற்ப பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் , தங்கள் தொலைபேசி எண்ணை மாற்றாமல், பைபர் நெட் இணைப்புக்கு மாறலாம். அவ்வாறு மாறும் வாடிக்கையாளர்களுக்கு, ஆறு மாதத்திற்கு 200 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
புதிய வடிகையாளர்களுக்கு நிறுவுதல் கட்டணம் 500 ரூபாய் தள்ளுபடி, மூன்று மாதங் காரிகளுக்கு 90 சதவீதம் தள் ளுபடியாக, 500 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
இது தவிர 6 மாதம் மற்றும் 12 மாத திட்டத்தில் சேரும் வாடிக் கையாளர்களுக்கு, இலவச வைபை மோடம் வழங்கப்படுகிறது. அடிப்படை திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் திட்டத்திற்கேற்ப இலவச மோடம் வழங்க, ஒப்பந்ததாரர்களுக்கு வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகள் வாயிலாக, பைபர் நெட் திட்டத்தில் வாடிக்கையாளர்களை அதிகரிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.