தேசமும், தெய்வீகமும் இரு கண்கள் என்று வாழ்ந்து மறைந்த முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 15 வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழா இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அவரை போற்றும் வகையில் தூத்துக்குடியில் இன்று (30.10.2022) 3வது மைல் பகுதியில் அமைந்துள்ள தேவர் திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மண்டல தலைவர் வழக்கறிஞர் பாலகுருசாமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, நகர் அமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், 15 வது வார்டு மாமன்ற உறுப்பினர் இசக்கி ராஜா, 33 வது மாமன்ற உறுப்பினர் பொன்னப்பன், மாநகர தொண்டர் அணி முருக இசக்கி, மற்றும் திமுக பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.