Thupparithal
செய்திகள்

தூத்துக்குடியில், கல்லூரி முதலாமாண்டு மாணவர் மீது பேராசிரியர்கள் தாக்குதல்: அரசு மருத்துவமனையில் அனுமதி! பரபரப்பு!.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பேராசிரியர்கள் தாக்கியதாக கூறி முதலாமாண்டு மாணவர் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி, முள்ளக்காடு அருகே உள்ள ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நேசமணி (22). இவர் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் விஸ்காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இன்று ஏப்ரல் 19ம் தேதி காலை காமராஜ் கல்லூரியில் வைத்து தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வு எழுதும் அறையில் ஏற்கனவே பாடம் நடத்திய போது எழுதப்பட்ட விடைகள் இருந்த நிலையில், அதனை மாணவர்கள் தேர்வின் போது பார்த்து எழுதியதாக கூறப்படுகிறது.

இதனால், தேர்வு எழுதிய மாணவர்களை சஸ்பெண்ட் செய்வதாக விஸ்காம் துறை பேராசிரியர்கள் சுரேஷ் மற்றும் சீனிவாச மணிகண்டன் ஆகியோர் கூறினராம். இது தொடர்பாக மாணவன் நேசமணி விளக்கம் அளிக்க முற்பட்டுள்ளார். அப்போது ஆசிரியர்கள் இருவரும் சேர்ந்து நேசமணியை அறைக்குள் இழுத்துச் சென்று தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் மாணவர்கள் இணைந்து கதவைத் திறந்து நேசமணியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தற்போது நேசமணிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் காரணமாக அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க கல்லூரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதனால் கல்லுரி அருகே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Related posts

இமாச்சலில் காங்கிரஸ் வெற்றி; தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

Admin

21-ம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு நிலைமையா? – குடிசை வீட்டில் இருளில் தவிக்கும் மீனவ மக்கள் – பட்டாவிற்காக 18 ஆண்டுகளாக அலைகலைக்கும் அரசு அதிகாரிகள்!

Admin

தூத்துக்குடி அரசு உதவி பெறும் பள்ளியில், நாணயக் கண்காட்சி; மாணவ, மாணவிகள் ரசித்து மகிழ்ந்தனர்.

Admin

Leave a Comment

error: Content is protected !!