தூத்துக்குடி, புன்னகாயல் பகுதியை சேர்ந்தவர் அண்டோ இவருக்கு பணிமய மாதா கோவில் எதிரே உள்ள விசுவாச போர்ட் யார்டு என்ற தோணி கட்டும் பகுதியில் புதியதாக
விசைப்படகு கட்டும் பணியானது நடைபெற்று வந்துள்ளது. பின்னர் படகு கட்டும் பணியானது கடந்த வாரம் முடிவற்ற நிலையில், இன்று பிற்பகல் வெள்ளோட்டத்திக்காக கடலுக்கு இழுத்து செல்ல தொழிலாளர்கள் முற்பட்டுள்ளனர்..
இந்நிலையில், அப்படகானது, எதிர்பாராத விதமாக வடபுரம் சரிந்துள்ளது. இதனால் படகின் அருகில் இருந்த உரிமையாளர் அண்டோ மற்றும் அருகில் நின்ற அகிலன் ஆகியோருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.. பின்னர், உடனடியாக அருகில் இருந்தவர்கள் தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் இருவரையும் சிகிசைக்காக சேர்ந்தனர்…
பின்னர், ராட்ஷச கிரேன் மூலம் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் படகை சம நிலைக்கு கொண்டு வந்தனர்..இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி சத்யராஜ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்..
திடீரென கவிழ்ந்த படகால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.