Thupparithal
செய்திகள்

போதையில் ‘கெத்து காட்டிய குடிமகன் கொத்தா தூக்கிய போலீஸ்.. இது தூத்துக்குடி சம்பவம்…!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள இரட்டைக்கிணறு கிராமத்தை சேர்ந்த வெட்டும் பெருமாள் என்பவர் இந்து முன்னனி கட்சியில் உறுப்பினராக உள்ளார். இவர் நேற்று மாலை சாத்தான்குளம் பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் மது போதையில் வந்ததாக தெரிகிறது. அப்போது மற்றொரு வாகனம் இவரது வாகனம் மீது மோதியதாக கூறப்படும் நிலையில், மோதிய மற்றொரு வாகனத்துடன் அவர் காவல் நிலையத்திற்கு தட்டுத் தடுமாறி மது போதையில் வந்து புகார் அளிக்க வந்துள்ளார்.

அப்போது காவல் நிலையத்தில் இருந்த போலீசார் புகாரை எழுத்துப் பூர்வமாக எழுதி கொண்டு வருமாறு கூறியுள்ளனர். ஆனால் போதை தலைக்கேறிய அவர் புகாரை எழுதி விட்டு வருவதாக கூறி சென்ற பின் அவர் காவல் நிலையத்தில் புகாரை கொடுக்காத நிலையில், நேராக சாத்தான்குளம் காவல் நிலையம் அருகே உள்ள திருச்செந்தூர் – நாகர்கோவில் தேசிய சாலையில் தனது இரு சக்கர வாகனத்தை “குப்புற படுக்க போட்டு” “எனது புகாரை இப்போ எடுக்கலன்னா… இந்த வண்டியை இந்த இடத்திலேயே கொளுத்திடுவேன்….”என போலீசாரை மிரட்டும் தோணியில் அவர் திடீரென ரகளையில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் அவரை சமாதானம் செய்து இரு சக்கர வாகனத்தை சாலையில் இருந்து எடுக்குமாறு கூறியுள்ளனர்.ஆனால் அவர் தனது இருசக்கர வாகனத்தை எடுக்க முடியாது எனக் கூறிய நிலையில் “இந்த இடத்திலேயே எனது இருசக்கர வாகனத்தை கொளுத்தி விடுவேன்” என போலீசாரை மிரட்டும் தோணியில் மது போதையில் பேசினார்.

பின்னர், அங்கு மப்டியில் வந்த போலீசார் இந்த ரகளையை கண்டதும், போதை தலைக்கேறிய அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மது போதை தலைக்கேறிய அந்த ஆசாமி “எதிரில் இருப்பது போலீசா..? அல்லது வக்கீலா…? என தெரியாத அளவிற்கு மூக்கு முட்ட குடித்த நிலையில் அந்த போலீசாரிடம் இதுகுறித்து உங்க அட்வகேட் கிட்ட புகார வாங்கினேன் அல்லவா..? என எதிரில் இருப்பது யார் என்றே தெரியாத அளவிற்கு புலம்பினார் அவர். அதற்கு அந்த போலீசார் அட நான் வக்கீல் இல்லையா போலீஸ் என கூறினார்.

பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்த தனது இரு சக்கர வாகனத்தை சாலையில் தூக்கி குப்புற படுக்க வைத்து கெத்து காட்டலாம் என நினைத்த நிலையில் போதையில் அவரே குப்புற விழுந்து விட்டார்.

பின்னர் மது போதையில் இருந்த அந்த நபரை பெண் போலீசார் உள்ளிட்ட பலரும் சேர்ந்து சமாதானம் செய்து அவரது அக்கப்போரை நிறுத்த கெஞ்சிய நிலையிலும் கேட்காத மது போதை ஆசாமி தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக நடுரோட்டில் தனது இருசக்கர வாகனத்தை போட்டு ரகலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட அவரை அங்கிருந்த போலீசார் ஒருவர் சட்டையை பிடித்து “கொத்தாக தூக்கி” ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் காவல் நிலையத்தில் போலீசார் அவரது உறவினரை வரவழைத்து அவரிடம் அறிவுரை கூறி கூட்டி செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், மது போதை ஆசாமி கொடுத்த புகாருக்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பரவாயில்லை. அவர் புகாரையே கொடுக்காமல் மது போதையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு உள்ளார் என கூறுகின்றனர். மேலும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இந்த மது போதை ஆசாமியிடம் கெஞ்சும் நிலைமைக்கு தள்ளப்பட்ட சாத்தான்குளம் போலீசின் இந்த நிலைமையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

அம்பேத்கரின் 66 வது நினைவு தினத்தை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!

Admin

தூத்துக்குடி, ஒட்டப்பிடாரத்தில் பகுதியில் வெள்ளை காகம் தென்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியது.

Admin

கழுத்தில் காய்கறி மாலை, கையில் சிம்னி விளக்கு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!.

Admin

Leave a Comment

error: Content is protected !!