Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி, ஒட்டப்பிடாரத்தில் பகுதியில் வெள்ளை காகம் தென்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியது.

கிராமபுறங்களில் ‘வெள்ளை காக்கா மல்லாக்க போகுது’ என்று சொல்வது உண்டு. வெள்ளை காக்கா என்ற ஒன்று இல்லை என பொருள்படுவது இந்த வாக்கியம். ஆனால், வெள்ளை காக்கா உண்டு என்பதுதான் அறிவியல் பூர்வமான உண்மை.

ஆம், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காட்டுராஜா. புரோட்டா மாஸ்டரான இவர் 5 தினங்களுக்கு முன்பு அபூர்வ பறவை ஒன்றை பார்த்ததாக கூறுகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், தினமும் காலையில் பறவைகளுக்கு உணவு வழங்குவேன். ஒருநாள் காலை உணவை உண்ண வெள்ளை காகம் காத்திருப்பதை பார்த்தேன். மற்ற பறவைகளில் இருந்து அந்த காகம் தனித்து இருந்தது. மேலும், இன்று வரை இவரது வீட்டிலேயே அந்த வெள்ளை காக்கா தஞ்சம் அடைந்துள்ளதாக கூறினார்.

வெள்ளை நிறத்தில் உள்ள காகத்தை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சொல்கின்றனர்.

Related posts

உலக பத்திரிகையாளர் தினம்; தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி!.

Admin

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கான நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டையை ஏபிஆர்ஓ முத்துகுமார் வழங்கினார். முதல்வருக்கு பாராட்டு

Admin

மாணவியை சிறப்பு விருந்தினராக அழைத்து தேசியக்கொடி ஏற்ற வைத்த பள்ளி நிர்வாகம்! திருச்செந்தூரில் நெகிழ்ச்சி சம்பவம்!.

Admin

Leave a Comment

error: Content is protected !!