Thupparithal
செய்திகள்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் முத்துநகர் பல்லுயிர் பூங்கா திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

சர்வதேச பல்லுயிர் பெருக்க தினத்தை முன்னிட்டு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில், 32 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பெருக்கத்தை மீண்டும் உருவாக்குதல் என்ற சர்வதேச இலக்கை மெய்ப்பிக்கும் வகையில் முத்துநகர் பல்லுயிர் பூங்கா திட்டத்தை உருவாக்கி உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மீளவிட்டானில் நடைபெற்றது.
விழாவுக்கு, தமிழ் நாட்டின் காடுகளின் மனிதர் என்று அழைக்கப்படும் சரவணன் தலைமை வகித்தார். இவர் புதுச்சேரிக்கு அருகில் 100 ஏக்கர் தரிசு நிலத்தை காடுகளாக மாற்றி பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சரணாலயமாக மாற்றியுள்ளார். இத்திட்டத்தை தொடங்கி வைத்து அவர் பேசும்போது, காடுகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கு தெற்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பாலசுப்ரமணியன், சாமிநத்தம் பஞ்சாயத்தை சேர்ந்த நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுமதி பேசும்போது, ‘’ஸ்டெர்லைட் ஆலை தொடங்கிய நாள் முதல், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் கால்வாய்களை புணரமைத்தல், கிராமப்புறங்களில் உள்ள குளங்களைத் தூர்வாறுதல் போன்ற பணிகளை செய்து வருகிறது. இதன்மூலம் மக்களின் வாழ்வாதாரத்திற்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் உதவுகிறது. கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட பசுமை தூத்துக்குடி என்ற திட்டத்தின் மூலம் 10 லட்சம் மரங்கள் நடவு செய்வது என திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, 1.25 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த பத்து லட்சம் மரத்தை 4000 ஏக்கர் நிலத்தில் நடுவதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தின் காடுகளின் பரப்பளவு 5.25 சதவீதத்தில் இருந்து 14.0 சதவீதமாக வளர்ச்சி அடையும். தற்போது தொடங்கியுள்ள இந்த முத்துநகர் பல்லுயிர் பூங்கா திட்டத்தின் முதற்கட்டமாக தமிழ் சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள தாவரங்களை மீட்டெடுத்து ஒரு பூங்காவை உருவாக்குவது என திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் முதன் முறையாக ஐந்தினை பூங்கா (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை) நிறுவப்பட உள்ளது. புவி வெப்ப மயமாதலை தடுக்கும் டை -மெத்தில் – சல்பைடு என்ற ரசாயனத்தை காற்றில் கலக்கும் பெரிய இலை மகோகனி மரங்களை நடுதல் முதற்கட்ட திட்டமாகும். அடுத்த கட்டமாக மூலிகைத் தோட்டம், அரிய வகை தாவரங்களை மீட்டெடுத்தல், நட்சத்திர வனம், மூங்கில் தோட்டம் ஆகியவற்றின் மூலம், தனித்துவமான பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தப்படும். தூத்துக்குடியில் உள்ள 403 கிராம பஞ்சாயத்துகளில் 35சதவீத காடுகளை உருவாக்க தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், கிராமப் பஞ்சாயத்து அமைப்புகள், Sterlite.communication@vedanta.co.in என்ற மின்னஞ்சலிலோ, 91 8870477985 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்’’ என்றார்.

Related posts

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, மாநகர் 20 வார்டு பகுதிக்கு உட்பட்ட “பகுதி சபா  கூட்டம்” தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

Admin

74வது குடியரசு தின விழா; ஐஎன்டியுசி அலுவலகத்தில் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்!.

Admin

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார்!

Admin

Leave a Comment

error: Content is protected !!