Thupparithal
அரசியல்

கருணாநிதி பிறந்த நாளையோட்டி துத்துக்குடி, கோவில்பட்டி அரசு மருத்துவமணையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

திமுக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 100வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி அரசு மருத்துவமணையில் நேற்று (03.06.2023) பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி மற்றும் அரசு மருத்துவமணையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து பொருட்களை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார்.

நிகழ்ச்சியில், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.

மேலும், கோவில்பட்டி நகர திமுக சார்பில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தங்க மோதிரங்களை அமைச்சர் கீதாஜீவன் அணிவித்து பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து பொருட்களைவழங்கினார்.

நிகழ்ச்சியில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இருந்தனர்.

Related posts

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்களை நம்பாமல் தொண்டர்களை நம்பாமல் ஒரு கம்பெனி மூலம் தேர்தலை சந்தித்த ஒரே கட்சி திமுக தான் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு..

Admin

கோவில்பட்டி, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 16.45 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

Admin

விளாத்திகுளத்தில் பேராசிரியர்’அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு மாபெரும் பொதுக்கூட்டம்.

Admin

Leave a Comment

error: Content is protected !!