Thupparithal
செய்திகள்

உலக பத்திரிகையாளர் தினம்; தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி!.

உலக பத்திரிகை சுதந்திர நாள் என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் ‘மனித உரிமைகள் சாசனம்’ பகுதி 19இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
1993ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீத ஜீவன் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பத்திரிகையாளர்களை சந்தித்து உலக பத்திரிகையாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும், மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பத்திரிகையாளர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்வில், பத்திரிகையாளர்கள் தமிழ் முரசு சண்முகசுந்தரம், ஏபிபி நாடு பிரபாகரன், இந்து தமிழ் ஜாய்சன், மாலை முரசு மோகன்ராஜ், நியூஸ் தமிழ் முத்துராமன், ராஜ் டிவி மாரிராஜா, தந்தி டிவி விஜய், ஈடிவி பாரத் மணிகண்டன், தீக்கதிர் விக்னேஸ்வரன் மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related posts

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) வரலாற்று துறை சார்பில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழா!.

Admin

பெற்றோர்கள், ஆசிரியர்கள் அறிவுரைகளை மாணவ, மாணவிகள் கேட்டு நடக்க வேண்டும். தூத்துக்குடி பள்ளி விழாவில் அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை!.

Admin

தூத்துக்குடி அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி பெண் பலி.

Admin

Leave a Comment

error: Content is protected !!