தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான தமிழ் இலக்கிய திறனறிவுத்தேர்வு தூத்துக்குடி செயின்ட் தாமஸ் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
இத்தேர்வு எழுதிய வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி சந்தியா, மாணவன் சந்தோஷ் ஜெபராஜ் வெற்றி பெற்றுள்னர்.
இதில் சந்தியா மாநில அளவில் ஆறாம் இடம் பிடித்துள்ளாள். இந்த வெற்றிக்கு உழைத்திட்ட முதுகலை தமிழாசிரியை தேவி சந்தனமாரி, தலைமை ஆசிரியர் சேகர், உதவி தலைமை ஆசிரியர் ஜாய் ப்ரியா, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் முனியசாமி, செயலர் ஜேம்ஸ் அமிர்தராஜ், உறுப்பினர்கள் முத்துக்கிருஷ்ணன், ராஜபாண்டி, புங்கராஜ், கருப்பசாமி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.