தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கழுகுமலையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15.30 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
பின்னர், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில்; அண்ணா ஆரம்பித்த திராவிட முன்னேற்ற கழகத்தை ஒரு குடும்பம் கபலிகரம் செய்கிறது என்ற காரணமாக தான் எம்.ஜி.ஆர் கழகத்திலிருந்து பிரிந்து அதிமுகவை ஆரம்பித்தார்.
வைகோவும் வாரிசு அரசியலை
எதிர்த்து தான் திமுகவிலிருந்து பிரிந்தார். திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலங்காலமாக நிகழ்ந்து வருவது ஒன்றுதான், உதயநிதி ஸ்டாலினை எப்போது முன்னிலை படுத்தினர்களோ அப்போதே நாங்கள் நினைத்தோம் சட்டமன்ற உறுப்பினராகுவார், பின்னர் அமைச்சராகுவார் என்று,
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மெகா கூட்டணி அமையும் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வியூகம் அமைத்து வருகிறார்.
தற்போதைய நிலையில் கூட்டணி அமைந்தாலும், அமையாவிட்டாலும் இந்த ஆட்சி களையப்பட வேண்டும். இந்த ஆட்சியில் மக்கள் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்த ஆட்சி மக்களுக்கு ஏமாற்றத்தை தான் கொடுத்திருக்கிறது. தேர்தல் எப்போது வந்தாலும் மெகா கூட்டணி அமைந்தாலும் சரி, கூட்டணி அமையாவிட்டாலும் சரி, திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.
அதிமுக தனித்து நிற்க தயார் அதே போல திமுக மற்றும் அனைத்து கட்சியும் தனித்து நிற்க்க முடியுமா என்று கூறினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், எம்ஜிஆர் இளைஞர் செயலாளர் ஆசூர் காளிபாண்டி, கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், கழுகுமலை நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, வர்த்தக அணி பிரிவு காமராஜ், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட அம்மா பேரவை தலைவர் மாரியப்பன், வார்டு செயலாளர்கள் மணிகண்டன், செந்தூர் பாண்டியன், அந்தோணி, பாஸ்கர், மாரியப்பன், கிளைச் செயலாளர்கள் பாலமுருகன், சேசுராஜ், வேலாயுதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுப்புராஜ், செட்டிகுறிச்சி கிருஷ்ணசாமி,
ராமமூர்த்தி, கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.