தூத்துக்குடி, எட்டையபுரத்தில் உள்ள பாரதியார் மணிமண்டபத்தில் பாரதியாரின் 141 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகியோர் அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கோட்டாட்சியர் மகாலட்சுமி, எட்டயபுரம் வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரி எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், பாரதி கூட்டுறவு நூற்பாலை முன்னாள் சேர்மன் ஆழ்வார் உதயகுமார், எட்டையபுரம் திமுக நகர செயலாளர் பாரதி கணேசன், ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், திமுக வார்டு செயலர் அருள் சுந்தர், பிச்சை மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.