Thupparithal
செய்திகள்

மத்திய அரசு பணிக்கான எஸ்.எஸ்.சி – எம்.டி.எஸ் வகுப்புகள் தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் துவக்கம்!.

தூத்துக்குடி, கின்ஸ் அகாடமியில் மத்திய அரசின் எஸ்.எஸ்.சி, எம்.டி.எஸ் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் (09.02.2023) நேற்று பிற்பகல் துவங்கியது.

துவக்க விழாவிற்கு, பள்ளி கல்வி துறையில் பணிபுரியும் ரா.சிவகுருநாதன் தலைமை வகித்தார். கின்ஸ் அகாடமியின் நிறுவனர் எஸ். பேச்சிமுத்து வரவேற்றார். சிறப்பு விருந்தினராக எஸ்.எஸ்.சி பயிற்றுனர் விக்னேஷ்வரி கலந்து கொண்டார்.

அப்போது, நிறுவனர் பேச்சு முத்து பேசுகையில், பிரதமரின் பத்து லட்சம் புதிய வேலை வாய்ப்பை தொடர்ந்து கின்ஸ் அகடமியில் இலவச எஸ்.எஸ்.சி – எம்.டி.எஸ் வகுப்புகள் துவக்கியிருக்கிறோம். பல்வேறு கிராம பகுதி மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றார்.

எஸ்.எஸ்.சி பயிற்றுனர் விக்னேஷ்வரி பேசுகையில், மத்திய அரசு முதன்முதலாக எஸ்.எஸ்.சி தேர்வை தமிழில் நடத்துகிறது. இதனால் தமிழக கிராமப்புற மாணவர்கள் அதிக அளவு தேர்வு எழுதுவது மட்டுமின்றி பெருமளவில் வெற்றியும் பெறுவார்கள். தமிழ் வழியில் படித்த மாணவர்கள் தற்போது அதிக அளவு மத்திய அரசு பணியில் வெற்றி பெற்று பணியிடம் பெற்று வருகின்றனர். மிக குறைந்த நாட்களில் தேர்வில் வெற்றிபெறும் வழிமுறை குறித்தும் அதற்கான பாடதிட்டம் குறித்தும் நாங்கள் உங்களுக்கு பல்வேறு குறிப்புகள் தருவோம். ஆகவே கடினமாக உழைக்கும் பட்சத்தில் நீங்கள் இந்த தேர்வில் வெற்றி பெற இப்போது இருக்கும் இந்த 60 நாட்களே போதுமானதாகும் என கூறினார்.

இவ்விழாவில், கின்ஸ் அகாடமி பயிற்றுனர்கள் ரேவதி, ஜோதிமணி, வினோத் மற்றும் இலக்கியா ஆகியோர் கலந்து கொண்டனர். நீதித்துறையில் பணியிடம் பெற்றுள்ள கின்ஸ் அகடமி மாணவி செல்வி கே. வித்யா நன்றி கூறினார்.

செய்தியாளர் மு.மணிகண்டன்

Related posts

தூத்துக்குடி தி.மு.க கவுன்சிலருக்கு உலக மனித சமாதான பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது..!

Admin

திமுக அரசை கண்டித்து அரிக்கேன் விளக்குகளை கையில் ஏந்தியும் , காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டும் நூதன போராட்டம்.

Admin

21-ம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு நிலைமையா? – குடிசை வீட்டில் இருளில் தவிக்கும் மீனவ மக்கள் – பட்டாவிற்காக 18 ஆண்டுகளாக அலைகலைக்கும் அரசு அதிகாரிகள்!

Admin

Leave a Comment

error: Content is protected !!