திருநெல்வேலியில், இன்று அதிமுக கழக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமணவிழாவில் கலந்து கொள்வதற்க்காக மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடி கோவில்பட்டி வழியாக எதிர் கட்சி தலைவரும், அதிமுக இடைகால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி சென்றார்.
அப்போது, தூத்துக்குடி, கோவில்பட்டி இனாம்மணியாச்சி விலக்கு அருகே அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளரும், அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமையில் மேளதாளங்கள் முழங்க அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வரவேற்பினை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களிடம் பேசுகையில், காலையிலேயே கூட்டமாக வந்து வரவேற்ற அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.
செய்தியாளர் மு.மணிகண்டன்