அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு இருப்பதும், ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதும் அணைவரும் அறிந்த உண்மை.
ஆனால் தொடர்ந்து கட்சிக்கு கலங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு ஓபிஎஸ் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். இதை தூத்துக்குடி மாவட்டம் அதிமுக சார்பில் வண்மையாக கண்டிக்கிறோம்.
எதிர் கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியால் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட எங்கள் அண்ணாச்சி எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்றாக இணைந்து தூத்துக்குடி மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டை என்று நிரூபித்து வருகிறோம்.
அப்படி இருக்கும் போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளரை அறிவித்து இருப்பது வண்மையாக கண்டிக்கத்தக்கது. அஇஅதிமுக கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் எங்கள் கட்சிக்கு புதிய பொறுப்பாளர்களை அறிவிப்பதற்கு நீங்கள் யார், கழகத்தில் கலகம் செய்ய துடிக்கும் ஓபிஎஸ்ஸை வண்மையாக கண்டிக்கிறோம்.
தூத்துக்குடி மாநகராட்சி 39 வது வார்டு அதிமுக வட்ட செயலாளரும், தூத்துக்குடி அதிமுக பகுதி இளைஞரணி செயலாளருமான திருச்சிற்றம்பலம் தனது கண்டன பதிவை சமுகவளைதளத்தில் பதிவு செய்து கண்டனத்தை தெரிவித்துள்ளார்.