Thupparithal
செய்திகள்

கருத்தடை அறுவை சிகிச்சையில் அலட்சியம்; தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை பகுதியைச் சேர்ந்த பெண், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கோவில்பட்டியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பின்னரும், 5.8.2019ல் கருவுற்றதாகவும், 26.2.2020ல் பெண் குழந்தை பிறந்தது என்றும் இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், கருத்தடை அறுவை சிகிச்சையில் அலட்சியமாக செயல்பட்டதாக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Related posts

விரால் மீன்கள் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அழைப்பு!.

Admin

தூத்துக்குடி, விவிடி மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்..சண்முகையா எம் எல் ஏ துவக்கி வைத்தாா்.

Admin

ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு: ஆட்சியர் அழைப்பு!.

Admin

Leave a Comment

error: Content is protected !!