தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வி உதவித் தொகை பெற பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது; அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீhமரபினர் மாணவ/மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
இலவச கல்வி உதவித்தொகை; அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிவ/மிபிவ/சீம மாணவ/மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பட்டயபடிப்பு மற்றும் தொழிற்கல்வி படிப்பு பயில்பவர்களுக்கு குடும்பத்தில் முதல் பட்டய/பட்டதாரியாகவும் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000 மிகாமல் இருக்கும் பட்சத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை; முதுகலை, ஐடிஐ, பாலிடெக்னிக், தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயில்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இரண்டாவது முறை மாற்றம் (Second Shift) பயிலும் மாணவ/மாணவியர்களும் இக்கல்வி உதவித்தொகை பெறலாம். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியர்கள் புதுப்பித்தல் (Renewal) கல்வி உதவித்தொகை விண்ணப்பப் படிவங்களை 15.11.2022க்குள்ளும் புதியது (Fresh) விண்ணப்ப படிவங்களை 15.12.2022-க்குள்ளும் பூர்த்தி செய்து கல்லூரிகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேற்படி உதவித்தொகை மாணவ/மாணவியர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வழங்கப்படவுள்ளதால் வங்கிக் கணக்கு எண், ஐகுளுஊ ஊழனந தவறாது சமர்ப்;பிக்க வேண்டும். மேலும் கிறித்தவ மதத்திற்கு மதம் மாறிய ஆதி திராவிட மாணவ/மாணவியர்கள் மற்றும் வேறு துறைகள் மூலம் (ஆதிதிராவிடர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் சமூக நலத்துறை) கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் இத்துறை மூலம் கல்வி உதவித்தொகை பெற இயலாது.
கல்வி நிலையங்கள்; கல்வி நிலையங்கள், இணையதளம் (Scholarship Portal) மூலம் புதுப்பித்தலுக்கான (RENEWAL) கேட்புகள் 10.11.2022 முதல் 06.12.2022-க்குள்ளும், புதியதற்கான (FRESH) கேட்புகள் 15.12.2022 முதல் 15.01.2023க்குள்ளும் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் கல்வி நிலையங்கள் மாணவ/மாணவியரின் பெயர், பிறந்த தேதி, கைப்பேசி எண், ஆதார் எண், வங்கி கணக்கு எண் மற்றும் IFSC Code ஆகியவை சரிபார்த்து கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பிழையின்றி பதிவிட வேண்டும்.
இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் அரசு இணையதளம் https://www.bcmbcmw.tn.gov.in.welfschemes.htm #scholarshipschemes-ல் உள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியுள்ள பிவ/மிபிவ/சீம மாணவ/மாணவியர்கள்; விண்ணப்பித்து பயனடையுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.