Thupparithal
செய்திகள்

நவ.16ல் ஓய்வூதியதாரர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 16ஆம் தேதி ஓய்வூதியதாரர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது; தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள்/பணியிலிருக்கும்போது மரணமடைந்தவர்கள் ஆகியோரது ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வு கால பலன்கள் பெறுவதில் ஏற்படுகின்ற குறைகளை நேரடியாக கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றும் பொருட்டு ‘ஓய்வூதியதாரர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 16.12.2022 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் சென்னை, ஓய்வூதிய இயக்குநரால் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்கள் அவர்களது ஓய்வூதியம் தொடர்பான குறைகளை (1) கடைசியாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற பதவி மற்றும் அலுவலகத்தின் பெயர் (2)ஓய்வு பெற்ற நாள் (3)ஓய்வூதிய கொடுப்பாணை எண் (4)ஓய்வூதியம் பெற்றுவரும் கருவூலத்தின் பெயர் (5)வீட்டு முகவரி (6) தொலைபேசி / கைபேசி எண் (7)கோரிக்கை விபரம் (8)கோரிக்கை எந்த அலுவலரிடம் நிலுவையிலுள்ளது? போன்ற விபரங்களுடன் 15.11.2022-ம் தேதிக்குள் ‘மாவட்ட ஆட்சியர், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628 101″ என்ற முகவரிக்கு வந்து சேரும்படி “இரண்டு பிரதிகளில்” விண்ணப்பத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

15.11.2022-க்குப் பின்னர் பெறப்படும் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும், விண்ணப்பித்த ஓய்வூதியதாரர்கள் 16.12.2022 அன்று காலை 10.30 மணிக்கு நடத்தப்படும் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Related posts

தூத்துக்குடி அருகே 13 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 25 கிலோ வாட் திறன் கொண்ட மின்மாற்றியின் மின் விநியோகத்தை – முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்

Admin

கள் இறக்கியதாக பனை தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு: போலீசார் மீது தமிழ்நாடு நாடார் பேரவை புகார்!

Admin

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி-கோயம்புத்தூர் ரெயில் சேவையை மீண்டும் இயக்க வேண்டும்- காங்கிரஸ் மாவட்ட தலைவர் முரளிதரன் கடிதம்!.

Admin

Leave a Comment

error: Content is protected !!