தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 3-வது புத்தகத் திருவிழா கடந்த 22ம் தேதி தொடங்கி இன்று 29-ந் தேதி வரை 8 நாட்கள் தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மகாலில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்று வருகிறது.
புத்தகத் திருவிழாவில் தினமும் தமிழகத்தில் உள்ள சிறந்த எழுத்தாளர்கள், பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. அதனைத் தொடர்ந்து, நேற்று “பதற்றமான சூழ்நிலையில் புன்னகை” என்னும் தலைப்பில் தூத்துக்குடியை சேர்ந்த பத்திரிகையாளரும், புகைப்பட கலைஞருமான எம். பாலமுருகன் தயாரிப்பில் ஜார்கண்ட் மாநிலம் ஆகிய பகுதிகளில் பதற்றமான சூழ்நிலையிலும் மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை குறித்து புகைப்படம் மற்றும் அங்கு நிலவக் கூடிய சூழ்நிலைகள் இதனை குறித்தும் தகவல் அறிந்து அதனை சேகரித்து ஒரு புத்தகமாக வடிவமைத்துள்ளார்.
இதனை நேற்று மாலை திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி “பதற்றமான சூழ்நிலையில் புன்னகை” என்னும் தலைப்பில் கூடிய புத்தகத்தை வெளியிட்டார்.
இதனை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். செந்திலராஜ், தூத்துக்குடி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மேயர் ஜெகன், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் நாறும்பு நாதன் தூத்துக்குடி எழுத்தாளா் முகமது யூசுப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.