இந்திய தேர்தல் ஆணையம் மூலமாக கடந்த 09.11.2022 அன்று புதிய வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில், சிறப்பு சுருக்க முறை, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திடும் பணி 09.11.2022 முதல் 08.12.2022 வரை நடைபெறும் என்றும், நவம்பர் 12, 13 – சனி, ஞாயிறு மற்றும் நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்கு சாவடிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டையபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில், எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் கலந்து கொண்டு அவரது பகுதிக்கு உட்பட்ட புதிய வாக்காளர்கள் விவரங்களில் பெயர், முகவரி உள்ளிட்டவை சரியாக உள்ளதா என்று சரி பார்த்து அவற்றில் பிழை இருப்பின் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து அவற்றை திருத்தம் செய்யது விண்ணப்பங்களை வழங்க தனது சிறப்பான பணியை மேற்கொண்டார்.