சேப்பாக்கம் திருவல்லிக்கேணியின் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு மதிய உணவு வழங்கியும் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் 20 வது வார்டு செயலாளர் ரவீந்திரன் மாமன்ற உறுப்பினர்கள் கீதா முருகேசன், தெய்வேந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதியும் 3 வது வார்டு சபா உறுப்பினருமான பிரபாகர், மற்றும் கழக நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் தொண்டர்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.