தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நகர வங்கியில் தலைவராக ஆர்.எஸ் ரமேஷ், துணைத் தலைவராக சரவணன் மற்றும் நிர்வாக இயக்குனராக 9 பேர் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிர்வாக குழுவில் குளறுபடிகள் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் தலைவர், துணைத் தலைவரை தற்காலிக பதவி நீக்கம் செய்ய கூட்டுறவு சங்கங்களில் இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும், குளறுபடிகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறதாக அதிகாரி தரப்பில் கூறப்படுகிறது.
கோவில்பட்டி நகர கூட்டுறவு வங்கியில் குளறுபடி தொடர்பாக தலைவர், துணைத் தலைவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆர்.எஸ் ரமேஷ் மதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் மு.மணிகண்டன்