77வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
இதே போல் கோவில்பட்டி ஆவின் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் வைத்து ஆவின் சங்க தலைவர் தாமோதரன் தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள், கருங்குளம் ஒன்றிய செயலாளர் லட்சுமண பெருமாள், அம்மா பேரவை மாவட்ட இனச் செயலாளர் நீலகண்டன், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அங்குசாமி, மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, கதர் ஸ்டோர்ஸ் சுப்புராஜ், அம்பிகை பாலன், குழந்தை ராஜ், ஜெய் சிங், பழனிகுமார், கோபி, முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.