77 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நகர்மன்ற தலைவர் க.கருணாநிதி கொடியேற்றினார்.
பின்னர், அவர் விழா மேடையில் பேசும்போது, பிளாஸ்டிக் இல்லா நகராட்சியாக உருவாக்க நாம் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். குப்பையில்லா கோவில்பட்டியாக மாற்ற வேண்டும் என்றார்.
இதனை தொடர்ந்து, காந்தி நகர் நகராட்சி நடுநிலை பள்ளி மாணவிகள் பங்கேற்ற ஒயிலாட்டம், தப்பாட்டம், பேச்சு போட்டி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன…
சிறப்பாக நடனமாடியும், பேசியும் அசத்திய பள்ளி மாணவிகளுக்கு நகர்மன்ற தலைவர் கருணாநிதி பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், நகராட்சி ஆணையாளர் கமலா, நகராட்சி பொறியாளர், நகர்மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.