Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி அருகே கால்வாயில் தத்தளித்தவாறு உடலை தூக்கி சென்ற கிராம மக்கள்!

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகே மழவராயநத்தம் கிராமத்தில் மயானத்துக்கு செல்லும் பாதையின் குறுக்காக கால்வாய் செல்கிறது. மழைக்காலத்தில் இந்த கால்வாயில் தண்ணீர் செல்லும்போது, இறந்தவர்களின் உடலை கால்வாய் தண்ணீரில் தத்தளித்தவாறே கிராம மக்கள் தூக்கி சென்று அடக்கம் செய்கின்றனர்.

இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் இறந்து விட்டார். நேற்று அவரது உடலை அடக்கம் செய்வதற்காக, கால்வாயின் குறுக்கே கழுத்தளவு தண்ணீரில் தத்தளித்தவாறு கிராம மக்கள் சுமந்து சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, இறந்தவர்களின் உடலை கால்வாய் தண்ணீரில் தத்தளித்தவாறே தூக்கிச் சென்றுதான் அடக்கம் செய்து வருகிறோம். எனவே இங்கு கால்வாயின் குறுக்காக பாலம் அமைக்க வேண்டும். இல்லையெனில் மயானத்துக்கு செல்வதற்கு மாற்றுப்பாதை ஏற்படுத்தி தர வேண்டும்” என்றனர்.

Related posts

திருக்குறள் வாழ்வியலாக்க மாநாடு; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Admin

முன்னாள் ராணுவத்தினர் மாநில ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

Admin

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியியல் இருந்து கட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்களை மார்கண்டேயன் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!