திமுக மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கத்தின் சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கட்சியினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
தூத்துக்குடியில், 39 வது வார்டு பகுதிகுட்பட்ட வரதராஜபுரத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் இளைஞரணி ராஜா சுரேஷ்குமார் ஏற்பாட்டில், பகுதி செயலாளரும், 39 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சி சுகாதார குழு தலைவருமான சுரேஷ்குமார் தலைமையிலும், வட்டச்செயலாளர் கீதா மாரியப்பன் முன்னிலையிலும், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மேலும் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட திமுக பிரதிநிதி சக்திவேல், இளைஞர் அணி செயலாளர் சண்முகபுரம் பகுதி சூரியகாந்த், மற்றும் 39 வது வார்டு இளைஞர் அணி சார்பில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .