Thupparithal
அரசியல்

கலைஞர் நூற்றாண்டு விழாவை பொறியாளர் அணி சிறப்பாக கொண்டாட வேண்டும்- அமைச்சர் கீதாஜீவன் உத்தரவு…!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பாக கலைஞர் நூற்றாண்டு பொன்விழா நிகழ்ச்சி குறித்து நெல்லை மண்டல கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதுபோல், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் நடத்துவது குறித்து எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் அன்பழகன் வரவேற்புரையாற்றினார்.

கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான தளபதியார் பொறுப்பேற்ற பின் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் அனைத்து தரப்பினரின் வாழ்வாதாரத்தை பேணிபாதுகாக்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சி இருந்து வருகிறது. திமுக ஆட்சியில் செய்த திட்டங்கள் ஏராளம் இதை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். பாஜக ஜாதி, மதம் மூலம் பிரிவினையை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கிறது. அதற்கு நாம் இடம் அளித்து விடக் கூடாது. தேசிய அளவில் தளபதியார் உருவாக்கி கொடுத்த இந்தியா கூட்டணியை கண்டு பிரதமர் மோடி அச்சத்துடன் இருப்பதால் நமது தலைவரையும் முதல்வரையும் தேவையில்லாமல் விமர்சனம் செய்கிறார். அதற்கு வரும் 2024 தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அனைவரும் ஓற்றுமையாக பணியாற்ற வேண்டும்.

வடக்கு மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கலைஞர் நூற்றாண்டு விழாவை பொறியாளர் அணி சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பேசினார். தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவர்களை ஒருங்கிணைத்து பொறியாளர் அணி சார்பில் தலைமை கழகத்திலிருந்து தரப்படும் தலைப்புகளுக்கு ஏற்றவாறு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வழிகாட்டுதலின்படி கவியரங்கம் மற்றும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளையும் வடக்கு மாவட்ட மற்றும் மாநகர பொறியாளர் அணியின் சார்பாக நடத்துவது, வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட நகர கழக, ஒன்றிய கழக, பேரூர் கழக மற்றும் மாநகரத்தின் சார்பாக பகுதி அமைப்பாளர்களை மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனை படியும் பரிந்துரையின் படியும் விரைவில் நியமிப்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டத்தில், பொறியாளர் அணி மாவட்ட தலைவர் பழனி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஆபிரகாம், மாரிராஜ், ஜாபர், ரஞ்சித், சின்னதுரை, மாநகர துணை அமைப்பாளர்கள் பாலகணேஷ், ஸ்ரீதர், மற்றும் மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக, மாநகர அமைப்பாளர் ரூபன் நன்றியுரையாற்றினார்.

Related posts

தூத்துக்குடி, கோவில்பட்டியில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு!.

Admin

தேர்தல் பரப்புரை; கனிமொழி-யை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட மேயர் திடீரென பரோட்டா கடையில் நுழைந்து ஆம்லெட் போட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Admin

தூத்துக்குடி, எம்ஜிஆர் சிலையில் புதிதாக எழுதப்பட்ட பெயர் பலகை அழிப்பு; மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம் கடும் கண்டனம்.

Admin

Leave a Comment

error: Content is protected !!