Thupparithal
செய்திகள்

வரலாற்று ஆவணங்கள் இருந்தால் அரசுக்கு வழங்கலாம் : ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் தங்களிடம் வரலாற்று ஆவணங்கள் இருந்தால் அரசுக்கு வழங்கலாம் எஎன ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது; சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆவணக்காப்ப கத்தின் கிளை அலுவலகம் மதுரையில் இயங்கி வருகிறது. இங்கு அரசு துறைகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் பாது காக்கப்பட்டு வருகின்றன. மேலும், தொன்மையான மிகவும் பழமை வாய்ந்த கலை, பண்பாடு, நாகரீகத்தை அடையாளமாகக் கொண்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஆவணங்களை தனிநபர், தனியார் நிறு வனங்கள். மடங்கள், சர்ச், மசூதி ஆகியோரிடம் பெற்று பாதுகாத்து வருகிறது.

தற்போது இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை தமிழக அரசு வழிகாட்டுதலின்படி இச்சமுதாயத்திற்கும், வருங்கால சந்ததியினருக்கும் பயனளிக்கும் வகையில் Computer / Internet Scanning / Digitization முறையில் பதிவு செய்து அதன் விவரங்களை அனைத்து ஊடகங்களுக்கும், புதுடெல்லி தேசிய ஆவணக்காப்பகத்திற்கும் தெரியப்படுத்த உள்ளது.

எனவே பொதுமக்கள், சமூகஆர்வலர்கள், தனியார் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள வரலாற்று ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அல்லது ஆராய்ச்சி அலுவலர், மாவட்ட ஆவணக்காப்பகம், எண். 9 பழைய இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காந்தி நகர், மதுரை-20 என்ற முகவரிக்கு வழங்க வேண்டும். மேலும் தொலைபேசி எண் 0452-2528311 அல்லது Email : drc8311mdurai@gmail.com போன்றவை மூலமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Related posts

கோவில்பட்டி 22வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜேஸ்மின் லூர்து மேரியின் புதிய முயற்சி, பொதுமக்கள் பாராட்டு!.

Admin

மத்திய அரசு பணிக்கான எஸ்.எஸ்.சி – எம்.டி.எஸ் வகுப்புகள் தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் துவக்கம்!.

Admin

74வது குடியரசு தின விழா; ஐஎன்டியுசி அலுவலகத்தில் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்!.

Admin

Leave a Comment

error: Content is protected !!