Thupparithal
செய்திகள்

74வது குடியரசு தின விழா; ஐஎன்டியுசி அலுவலகத்தில் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்!.

74 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு அன்னை இந்திராகாந்தி கட்டுமானம் அமைப்புசாரா மற்றும் அனைத்து பொது தொழிலாளர் நலச் சங்கம் ஐஎன்டியிசி சார்பில் தூத்துக்குடி, போல்பேட்டை ஏபிசிவி வளாகத்தில் உள்ள ஐஎன்டியுசி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் ராஜ் வரவேற்புரையாற்றினார். ஐஎன்டியுசி மாநில அமைப்பு செயலாளர் சுடலை சிறப்புரையாற்றினார்.

பின்னர் தீர்மானங்களான, அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உதவித் தொகைகள் சமமாக வழங்கப்பட வேண்டும். வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பெட்ரோல், டீசல் எரிவாயு ஆகியன மானியத்தில் வழங்கவும், ஆட்டோ ஓட்டுநர்கள் புதிதாக ஆட்டோ வாங்கினால் ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டாம் எனவும், வாரியத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ஐந்தாயிரமாக உயர்த்தி காலதாமதமில்லாமல் மாதந்தோறும் வழங்க வேண்டும். பனைத் தொழில் மற்றும் பனை தொழிலாளர்களை பாதுகாக்கவும் பனைத் தொழிலுக்கு தேவையான உபகரணங்களை அரசு இலவசமாக வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக, மாவட்ட செயலாளர் இந்திரா காந்தி நன்றி கூறினார்..

இந்நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள், சந்திரபோஸ், கற்பகக்கனி, எடின்டா, காங்கிரசை சேர்ந்த ராகுல், சேகர், செந்தூர் பாண்டி, ஐசன் சில்வா, மைதீன், மெர்லின், பிச்சாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கோவில்பட்டி கண் தான இயக்கம் மற்றும் கே.ஆர்.கல்வி நிறுவனங்கள் இணைந்து கண் தான விழிப்புணர்வு பேரணி..!

Admin

விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகைத் திட்டம்; விண்ணப்பங்கள் வரவேற்பு!.

Admin

வாக்குப்பதிவு மையத்தில் அதிமுக வேட்பாளரின் முகம் மற்றும் சின்னம் அடங்கிய மாதிரி வாக்குப்பதிவு அட்டவணை; கையும், களவுமாக பிடித்த மேயர் ஜெகன்…!

Admin

Leave a Comment

error: Content is protected !!