நாடார் மகாஜன சங்க தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது.
நாடார் பேரவை மாவட்டத் தலைவர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில், நாடார் மகாஜன சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வேட்பாளர் ரவிசேகர், மாநகராட்சி செயலாளர் வேட்பாளர் உதயசூரியன், முன்னிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியை 10 பகுதிகளாக பிரித்து தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டது. அண்ணா நகர் பகுதி பொறுப்பாளராக காசிலிங்கம், பிரையண்ட் நகர் பகுதி பொறுப்பாளராக சிவசு முத்துக்குமார், சண்முகபுரம் பகுதி பொறுப்பாளராக அருண் சுரேஷ் குமார், போல்பேட்டை பகுதி பொறுப்பாளராக உதயசூரியன், மீளவிட்டான் பகுதி பொறுப்பாளராக துரைச்சாமி, கிருஷ்ணராஜபுரம் பகுதி பொறுப்பாளராக கண்டிவேல், சிலுவைப்பட்டி பகுதி பொறுப்பாளராக அந்தோணிபிச்சை, WGC ரோடு, VE ரோடு பகுதி பொறுப்பாளராக ரவிசேகர், அழகேசபுரம், செல்விஜர் தெரு பகுதி பொறுப்பாளராக அற்புதராஜ், முத்தையாபுரம் பகுதி பொறுப்பாளராக ஜோசப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாநகரில் நாடார் மகாஜன சங்கத்தில் 611 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரையும் வீடு வீடாகச் சென்று சந்தித்து வாக்குகள் சேகரித்து ஆதரவு திரட்டவும், மகாஜன சங்க தேர்தலில் ஒருங்கிணைந்த நாடார் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வெற்றி வேட்பாளர் என்.ஆர். தனபாலன் மற்றும் அணியை சேர்ந்த அனைத்து வேட்பாளர்களுக்கும் நமது குலத் தொழிலான பாரம்பரிய சின்னம் பனைமரம் சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.