Thupparithal
செய்திகள்

யோக்கியன் வரான் சொம்பு எடுத்து உள்ளவை என்ற பழமொழி ஏற்றவாறு உன் யோக்கியம் தூத்துக்குடியில் அனைவருக்கும் தெரியும்-தூத்துக்குடி முன்னாள் மேயரை கடுமையாக சாடிய அமைச்சர் கீதாஜீவன்!.

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி, சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் எதிரில் நடைபெற்றது. சமூக நலத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக பட்டிமன்ற பேச்சாளரும், தமிழ்நாடு பாடநூல் கழக கல்வியியல் பணிகள் தலைவரும், திமுக தலைமைக்கழக கொள்கை பரப்புச் செயலாளருமான திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டார்.

அப்போது அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சாதனைகளை யாரும் மறைக்க முடியாது. தொலைநோக்கு பார்வையோடு தமிழர்கள் வாழ்வாதாரம் உயர வேண்டுமென சத்துணவு திட்டம், சத்துவபுரம், ஆகிய பல திட்டங்களை கொண்டு வந்தவர். அவருடைய வழியில் திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இலவச பேருந்து திட்டம், காலை சிற்றுண்டி, புதுமை பெண் திட்டம், எந்த ஆட்சியிலும் இல்லாத நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் திருப்பணி, கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. 12ம்வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, நான் முதல்வன் திட்டம், நரிக்குறவ மக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ் அட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது. மக்களை தேடி மருத்துவத் திட்டத்தில் வீடு தேடி சென்று ஒரு கோடி பேர் பார்க்கப்பட்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட வாழ்கை முறை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதற்கு காரணம் திமுக,

புதிய கல்வி கொள்கை;

புதிய கல்விக் கொள்கை மத்திய அரசு கொண்டு வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்ட இருக்கிறது. கிராமப்புறத்தில் உள்ள ஏழை, எளிய குடும்பத்தை சார்ந்த முதல்முறையாக படிக்க இருக்கின்ற குழந்தைகளுக்கு விவசாய குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகளுக்கு வாய்ப்பை மறுக்க போகும் திட்டம் தான் இந்த புதிய கல்வி கொள்கை திட்டமாகும்.. இது தமிழர்களுக்கு ஆபத்து.. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்.

கார்ப்பரேட் முதலாளி மோடி;

மோடி யாருக்கு திட்டம் கொண்டு வந்திருக்கிறார்? ஏழை, எளிய மக்களுக்கா இல்லை.. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வட்டி தள்ளுபடி பண்றார். அவர்களுக்கு புதிய கடன் வழங்குகிறார். மாணவர்களுக்கு கல்வி கடன் ரத்து செய்ய சொன்னதை செய்தாரா? கஷ்டப்பட்ட மக்களுக்கு செய்வது இல்லை.. அவரால் வளர்க்க பட்ட அதானி நம்பர் ஒன் பணக்காரர் அவருடைய ஆசை அதுதான்.. ஏழை, எளிய மக்களுக்கு எந்த திட்டமும் செய்யவில்லை. டோல்கேட்டில் சார்ஜ் குறைக்கவில்லை பணம் உயர்த்தினார். அவர் பதவி ஏற்கும் போது கேஸ் விலை 450 இன்று 1,200 ரூபாய், விலைவாசி உயர்வுக்கு மோடி தான் காரணம்.. டீசல், பெட்ரோல், கேஸ் விலை உயர்கிறது. சாதாரண குடிமகனுக்கும் தெரியும்.. மோடி அரசு சொன்ன எதையும் செய்யவில்லை என்று..

பத்து வருஷமாக அதிமுக எதையும் செய்யவில்லை. 8வருடம் பாஜக ஆண்டு கொண்டு இருக்கிறது. ஒன்றும் செய்யவில்லை. வேலை வாய்ப்பு உருவாக்கப்படவில்லை.

திமுக வாக்குறுதி;

530 வாக்குறுதிகளில் 70% வாக்குறுதிகள் திமுக ஆட்சி நிறைவேற்றியுள்ளது. மேலும் பெண்களுக்கு ஆயிரம் உதவித்தொகை கட்டாயம் கொடுப்பார் ஒன்றை வருஷம்தான் முடிந்துள்ளது. வாக்குறுதி 5 ஆண்டுகளில் நிரைவேற்ற வேண்டும். அதை நிறைவேற்றுவார்.

மோடி மீது சாடல்;

அப்பன் சொத்தை வித்து தின்பவரை ஊதாரி பையன் என்று சொல்லுவோம். அதே தான் இந்த உதாரி பையன். அந்த காலத்தில் நேரு காலத்தில் உருவாக்கின பொது துறை நிறுவனங்களை விற்று தின்னு வருகிறார். பொது துறை நிறுவனமான பிஎஸ்என்எல், எல்ஐசி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.. இருக்கிற சொத்தை வித்து தின்ன கூடியவர் மோடி,

இவர்கள் சாதனையை சொல்லி வாக்கு கேட்க முடியாது. மதம், இனம், ஜாதியின் பெயரால் பிரிவினை உண்டாக்கிட வேண்டும். குட்டையை குழப்பி மீன் பிடிக்க வேண்டும என்ற எண்ணத்தில் வரும் இவர்களுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெற வேண்டும்.

ரூபாய் மதிப்பிழப்பு;

மோடி ஆட்சிக்கு வந்த போது டாலர் 40 ரூபாய் இப்போது ஒரு டாலர் மதிப்பு 80 ரூபாய், வர வர மதிப்பிழப்பு கீழே போய்க் கொண்டே இருக்கிறது.

இந்து திணிப்பு;

இந்தியை திணித்து மீண்டும் ஒரு மொழி போராட்டத்தை உருவாக்கிட வேண்டாம். என்று முதல்வர் சொன்ன மாதிரி தமிழக மக்கள் சளைத்தவர்கள் அல்ல, திராவிட முன்னேற்ற கழகம் சளைத்தவர்கள் அல்ல,

திமுக எம்பி கனிமொழி;

முன்னாள் இருந்த தூத்துக்குடி எம்பிகளில் செயல்படக்கூடிய எம்பியாக கனிமொழி அக்கா மட்டுமே இருக்கிறார். மத்திய அமைச்சர்களையும், மத்திய அரசு அதிகாரிகளையும் சந்தித்து கோரிக்கை வைத்துக் கொண்டே இருக்கிறார். மத்திய அரசு செவிடன் காதில் ஊதுன சங்கு மாதிரி உட்கார்ந்து இருக்கிறது..

முன்னாள் அதிமுக ராஜ்ய சபா எம்பியும், தற்போது பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா மீது சாடல்;

முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா குறித்து பேசுகையில், யோக்கியன் வரான் சொம்பு எடுத்து உள்ளவை என்ற பழமொழி ஏற்ற வாறு உன் யோக்கியம் தூத்துக்குடியில் அனைவருக்கும் தெரியும்.. பேசிய நாறி போய் விடாதே, ஒன்றுமில்லை வெறும் வெத்து வேட்டு உன் சாதனையை சொல்லி ஓட்டு கேள் நாங்கள் எங்கள் சாதனை சொல்லி அடுக்கடுக்காக ஓட்டு கேட்போம் என கடுமையாக சாடினார்.

பின்னர், அவர் பேசுகையில், தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி பெண்கள் படிக்க வைக்க வேண்டும். நரிக்குறவர்களை படிக்க வைக்க வேண்டும் ஒடுக்கப்பட்டவர்களை படிக்க வைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டு செயல்படுத்தி வருகிறோம். இந்த திராவிட மாடல் ஆட்சியில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர தலைவர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கடலோர காவல் படையினர் ஒரு சிலருக்கு நீச்சல் கூட அடிக்க தெரியாது.. அவர்களை நம்பி சென்றால் எப்படி பிழைக்க முடியும்-தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய பேச்சால் சர்ச்சை…!

Admin

விரால் மீன்கள் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அழைப்பு!.

Admin

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டம் – பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது.!!

Admin

Leave a Comment

error: Content is protected !!