Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி பள்ளிகளில் இலவச மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர் கீதாஜீவன்!.

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி சி.எம். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தாளார் வள்ளியம்மாள் திருச்சிற்றம்பலம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை சங்கரேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார்.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு 66 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார்.

முன்னதாக அவர், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

விழாவில், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளரும், கவுன்சிலருமான சுரேஷ்குமார், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், அறங்காவலர் குழு உறுப்பினர் மஞ்சுளா, திமுக வட்டச் செயலாளர் கீதா செல்வமாரியப்பன், வார்டு அவைத்தலைவர் கணேச பாண்டியன், வட்டப்பிரதிநிதிகள் இளங்கோ, பொன்ராஜ், செல்வக்குமார், பொருளாளர் பாஸ்கர், மற்றும் சுரேஷ்குமார், இளைஞர் அணி அருணாச்சலம், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தசாமி, உள்பட பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து காரப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 253 பேருக்கும், சி.வ.அரசு உயர்நிலைப்பள்ளியில் 20 பேருக்கும் உட்பட்ட அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 339 மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் சைக்கிள் வழங்கினார்.

Related posts

அனைத்து வீடுகளிலும் ‘பைபர் நெட் ‘ திட்டம் பி.எஸ்.என்.எல். முயற்சி!

Admin

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நலச்சங்க மாநில மாநாடு-டிச 4 ஆம் தேதி நடக்கிறது.

Admin

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 1.20 கோடி மதிப்பீட்டில் புதிய அறுவை சிகிச்சை மையம் அமைச்சர் கீதா ஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!

Admin

Leave a Comment

error: Content is protected !!