Thupparithal
செய்திகள்

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நலச்சங்க மாநில மாநாடு-டிச 4 ஆம் தேதி நடக்கிறது.

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்க 22 வது மாநில பொது குழு மாநாடு வரும் 4ந் தேதி தூத்துக்குடியில் நடைபெற உள்ளது.. இது குறித்து சங்க மாநில தலைவர் வீரமுத்து தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்.. அமைப்பு ரீதியான மாநில மாநாடு கூட்டம் டிசம்பர் 4ஆம் தேதி தூத்துக்குடி மாணிக்க மஹாலில் நடைபெறுகிறது.

மாநாட்டில் கேபிள் டிவி ஆபரேட்டர்களை காப்பாற்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. பல நலத்திட்டங்கள் வழங்கி இருக்கிறோம். மத்திய, மாநில அரசுகள் எங்களுடைய தொழிலுக்கு பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. எங்களுடைய தொழிலை நசுக்கி வருகிறார்கள். எனவே கேபிள் டிவி ஆபரேட்டர்களை பாதுகாக்கவும், கேபிள் டிவி வளர்ச்சியை உருவாக்க மாநாட்டின் தீர்மானம் நிறைவேற்றப்படும். தொழில்நுட்ப வளர்ச்சி இணையதள சட்டத்தால் பாதிப்புகள் நிறைய உள்ளது என்றார்.

தொடர்ந்து தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்க மாநில பொதுச் செயலாளர் வெள்ளைச்சாமி பேசுகையில்…மாணிக்க மஹாலில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு முன்னதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நடைபெற உள்ளது. பீங்கான் ஆபீஸ் முன்பிருந்து தொடங்கும் இந்த ஓட்டத்தில் வெள்ளை சீருடை அணிந்தவாறு அனைவரும் கலந்து கொள்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து மாநாட்டில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். செல்போனில் தொலைக்காட்சியை காட்டும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. அதனை தடுக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம் என்றார்.

பேட்டியின் போது, தமிழ்நாடு கேபிள் ஆபரேட்டர்கள் சங்க மாநில துணைத்தலைவர்கள் தாமோதரன், ராஜேந்திர பிரபு, மாநில துணை செயலாளர் சிவகுமார், மாவட்ட செயலாளர் கண்ணன், சங்க தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் ராஜு, தூத்துக்குடி தாலுகா தலைவர் செல்வராஜ், தூத்துக்குடி தாலுகா செயலாளர் வைகுண்ட ராமன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Related posts

இயற்கை பாதுகாப்பு 2023 பனை விதைகள் விதைத்தல் விழா மற்றும் சமூக விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது

Admin

கோவில்பட்டியில் ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட விழா இன்று தேர் ஓடி வந்து கொண்டிருக்கும் போது அந்த நேரத்தில் பஸ் வேன் பைக் உள்ளிட்ட எல்லா வாகனங்களையும் போலீசார் அனுமதித்த காரணத்தினால் தேரோட்ட நிகழ்வில் இடையூறு ஏற்பட்டது.

Admin

தூத்துக்குடியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த பேரணியை மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!