டாக்டர் அப்துல் கலாமின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜீவ அணுக்கரக பொது நல அறக்கட்டளை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஜீவ அணுக்கரக பொது நல அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து ஜீவ அணுக்கரக பொது நல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் தலைமையில் ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் முன்னிலையில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அப்துல் கலாமின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அன்புராஜ், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, நகர மன்ற உறுப்பினர்கள் வள்ளியம்மா மாரியப்பன், செண்பகமூர்த்தி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, வேல்ராஜ், அம்பிகை பாலன், கதர் ஸ்டோரி சுப்புராஜ், மாரிமுத்து, கோமதி, பழனி குமார், கோபி, முருகன், மற்றும் ஜீவ அணுக்கரக பொது நல அறக்கட்டளை நிர்வாகிகள் மகேஷ், பெருமாள், ராமர், சுடலை, பாலசுப்பிரமணியன், செந்தில்குமார், ரமேஷ், சரவணன், நல்லதம்பி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு அப்துல் கலாம் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.