Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையின புதிய முதல்வர் நியமனம்!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய முதல்வராக சிவக்குமார் பொறுப்பேற்றுள்ளார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றி வந்த கலைவாணி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனை மயக்க மருந்து துறை மருத்துவர் சிவக்குமார் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் கூறுகையில், “தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும், ரூ.136 கோடி மதிப்பிலான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை போன்ற திட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புதிய முதல்வர் சிவக்குமார் இதற்கு முன்னர், திருச்சி, கன்னியாகுமரி, தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார்.

திருச்சி அரசு மருத்துவமனை மயக்க மருந்து துறை எச்.ஓ.டி.,யாக பணியாற்றி வந்த நிலையில் அவர் பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தூத்துக்குடியில், நடிகர் ரஜினிகாந்த் 73வது பிறந்த நாளை முன்னிட்டு 73 கர்ப்பிணி பெண்களுக்கு 21 சீர்வரிசை பொருட்களுடன் வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

Admin

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினால் மக்களுக்கு எந்த நோயும் ஏற்படவில்லை. சிலர் வீண் வதந்திகள் பரப்பி வருகின்றனர்..மக்கள் நம்ப வேண்டாம்- ஸ்டெர்லைட் ஆலையில் பல வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வந்த பணியாளர்கள் கூட்டாக பேட்டி…!

Admin

ராவ் பகதூர் குருஸ் பர்னாந்துக்கு மணி மண்டபம்-தூத்துக்குடி மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் தீர்மானம்!.

Admin

Leave a Comment

error: Content is protected !!