தமிழகம் முழுவதும் இன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, “பகுதி சபா கூட்டம்” நடிபெற்றது. தூத்துக்குடி 20வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
கிராம சபை கூட்டம் போல நகர உள்ளாட்சிகளிலும் வார்டு கமிட்டி அமைத்து, வார்டு வாரியாக பகுதி சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள வார்டுகள் தோறும், வார்டு கவுன்சிலர் தலைமையில் 5 பேர் அடங்கிய ஒரு குழுவை உள்ளாட்சி மன்றங்கள் அமைத்துள்ளன.
இந்த கூட்டத்தில் மக்கள் வைக்கும் கோரிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அனுப்பப்படும். இதற்கான முன்னேற்பாடு பணிகளை அந்தந்த வார்டு கவுன்சிலர்களும், அதிகாரிகளும் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இன்று (01.11.2022) உள்ளாட்சி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் கிராமம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிளில் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
20 வார்டு பகுதி கூட்டமானது, தூத்துக்குடி போல் பேட்டை கிழங்கு சாலையில் அமைந்துள்ள கீதா ஹோட்டல் பின்புறம் அமைந்துள்ள பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி “பகுதி சபா கூட்டபானது” நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் 20 வது வார்டில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் அங்குள்ள திறந்தவெளி அரங்கில் வார்டு மக்களின் குறைகளை அவர் கேட்டறிந்தார்.
இதேபோன்று தமிழகம் முழுவதும் இன்று கூட்டம் நடைபெறுகிறது. இதில் அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம். எனவும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் 20வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் அடிப்படை வசதியான கழிவு நீர் கால்வாய் சாலை மற்றும் மின் விளக்கு வேகத்தடை அமைத்துக் கொடுத்திட வலியுறுத்தினர்.
கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ, மாநகராட்சி சுகாதார துறை ஆய்வாளர் அரிகணேஷ், பகுதி சபா உறுப்பினர்கள், ஐசக், ரவீந்திரன், நவநீத கிருஷ்ணன், அருணகிரி, தங்கம்மாள், ஆகியோர் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.