கோவா மாநிலம், வாஸ்கோடகாமாவில் அகில இந்திய அளவில் கராத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில், தமிழ்நாடு சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மாவட்ட செயலாளர் முத்துராஜா தலைமையில் பங்கேற்றனர். இதில், கட்டா பிரிவில் கிருத்திக் சர்வான், ஆதர்ஷ், ஹர்ஷத் ராஜ் , சுவாலிக் முகமத், சோகித், ஆகாஷ், பிரனேஷ் தங்க பதக்கத்தையும் அண்டோ ஜெரால்ட் வெள்ளிப் பதக்கத்தையும் லோகேஷ் வெண்கல பதக்கத்தையும் சண்டை பிரிவில் ஹர்ஷத் ராஜ் மற்றும் ஆதர்ஷ் தங்க பதக்கத்தையும் பிரனேஷ், ஆகாஷ் , சுவாலிக் முகமது வெள்ளி பதக்கத்தையும் சோஹித் வெண்கல பதக்கத்தையும் வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட தலைவர் செந்தில் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.