தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் தனுஸ்கோடி (76). இவருக்கு சொந்தமான நிலம் விளாத்திகுளம் கழுகசாசலபுரத்தில் உள்ளது.
இன்று தனுஸ்கோடி தனது நிலத்திற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். எட்டயபுரத்தில் உள்ள மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை தனுஸ்கோடி தனது இருசக்கரவாகனத்தில் கடக்க முயன்ற போது, திருச்சியில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டு இருந்த கார் மோதியது.
இதில் பலத்தகாயமடைந்த தனுஸ்கோடி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்தும் எட்டயபுரம் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் திருச்சி துறையூர் சத்தியம்பாளையத்தினை சேர்ந்த ராமசந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.