Thupparithal
செய்திகள்

கோடைகாலம் தொடங்கியது உடலை எப்படி பாதுகாத்து கொள்ளவேண்டும்-தூத்துக்குடியில் நாற்பதாண்டு சேவையாற்றும் பிரபல மருத்துவர் அருள்ராஜ் விளக்குகிறார்.

கோடைகாலத்தில் மக்களை தாக்கும் நோயிடம் இருந்து எப்படி நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடியில் நாற்பது ஆண்டுகளாக மருத்துவத்துறையில் சேவையாற்றிவரும் பிரபல மருத்துவர் சுந்தரம் அருள்ராஜ்-ன் பிரத்யோக பேட்டி உங்களுக்காக,

இது குறித்து அவர் கூறுகையில், கோடைகாலத்தில், வெயில் அதிகம் இருக்கின்ற நேரத்தில் நமது உடம்பில் உள்ள நீர்ச்சத்து வெளியே போய் விடும், அந்நேரத்தில் சிறுநீர் குறைவாக போகும் போது கல்லடைப்பு ஏற்படும்.

நாம் என்ன செய்தாலும் அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும். சிறுநீர் வெளியேறும் போது அது எவ்வாறு இருக்கிறது என பார்க்க வேண்டும். அது வெள்ளையாக இருக்கும் பட்சத்தில் நலம், இல்லையென்றால் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும். சாதாரணமாக தண்ணீர் அருந்தினாலே போதுமானது, ஜூஸ், இளநீர் வாங்கி அருந்த வேண்டும் என்று நினைக்கவேண்டாம்.

தினசரி குறைந்தது 2 லிட்டர், 3 லிட்டர் வரைக்கும் அருந்த வேண்டும்.

சில பேர் தண்ணீர் அருந்த முடியாமால் இருதய நோயாளி, கிட்னி நோயாளி அவர்கள் ஒரு நாளைக்கு 500 மில்லி அருந்தலாம். ஒரு நாளைக்கு ஆயிரம் குடிக்கலாம்.

சிலருக்கு அதிக வியர்வை ஏற்படும் அதுக்கு தினசரி காலையில், ஒருமுறை மாலை ஒருமுறை நல்ல தண்ணிரில் சோப்பு போட்டு குளிக்க வேண்டும். அப்போது தான் சுத்தமாக இருக்கும்.

சாலையோர கடைகளில் சுவையான பரோட்டா அநேக இடங்களில் கிடைக்கும். பரோட்டோ சாப்பிடும் பட்சத்தில் அடுத்த நாள் டாக்டர் தான் வரணும் உங்க வீட்டிற்கு, கொரோனா என்கின்ற அரக்கனிடம் இருந்து தப்பி வந்து இருக்கிறோம்.

மேலும், ப்ளூ கிருமி என்று தற்போது வர தொடங்கியுள்ளது. அதற்கு 120 ரூபாய் மதிப்பில் ஊசி செலுத்தி கொள்ளலாம். இதனை மருத்துவரை அணுகி செலுத்தினால் மிகவும் நல்லது என விளக்கமளித்தார்.

Related posts

தூத்துக்குடி வஉசி சாலையில் உள்ள யூனியன் வங்கியை மற்றொரு கிளையுடன் இணைக்க முற்படுவதை கண்டித்து வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்..!

Admin

வில்ஹெல்ம் ரான்ட்ஜென் சர்வதேச கதிரியக்கவியல் தினம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது.

Admin

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 1.20 கோடி மதிப்பீட்டில் புதிய அறுவை சிகிச்சை மையம் அமைச்சர் கீதா ஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!

Admin

Leave a Comment

error: Content is protected !!