தூத்துக்குடி மாநகராட்சி அருகே காமராஜர் காய்கறி சந்தை அமைந்துள்ளது. இதன் தலைவராக சீனா தானா சுந்தரபாண்டியன் செயல்பட்டு வருகிறார். இதில் இயக்குனராக செபத்தையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தராஜ் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், மார்க்கெட் பதவியில் இருந்து மகாசபை கூட்டத்தைக் கூட்டி முடிவு எடுக்காமல் அமிர்தராஜ் விளகிக் கொள்வதாக மோசடியாக அமிர்தராஜின் கையெழுத்தை போலியாக போட்டு தற்போது மார்க்கெட் தலைவராக இருக்கும் சீனா தானா சுந்தரபாண்டியன் அமிர்திராஜை மோசடியாக நீக்கம் செய்துள்ளார்.
இந்த மோசடி இயக்குனர் அமிர்தராஜிற்கு தெரியவந்ததை தொடர்ந்து மார்க்கெட் இயக்குனர் பதவியில் இருந்து போலி ஆவணங்கள் தயாரித்து தனது கையெழுத்தை மோசடியாக போட்டு இயக்குனர் பதவியில் இருந்து நீக்கிய மார்க்கெட் தலைவர் சீனா தானா சுந்தரபாண்டியன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
சுமார் 100 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள இந்த மார்க்கெட் நிர்வாகத்தில் இருந்து தங்களை நீக்கிவிட்டு மார்க்கெட்டை அபகரிக்க சீனா தானா சுந்தரபாண்டியன் ஈடுபடுவதாகவும் அமிர்தராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.