தூத்துக்குடி, கீதா மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளி 18வது ஆண்டு விழா போல்பேட்டையில் உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்ரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
பள்ளி செயலாளர் ஜீவன் ஜேக்கப் வரவேற்புரையாற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெஸிந்தா ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவி, மாணவிகளுக்கு , ஆசிரியர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்ததால் இது போன்ற விழா நடைபெறவில்லை. இறைவன் ஆசியோடு இன்று நடைபெறுகிறது. எல்லோரும் மகிழ்ச்சியோடு இருக்கிறோம். தங்களது குழந்தைகளில் நிகழ்வுகள் மூலம் ஒவ்வொரு திறமைகளையும் பார்க்கும் வாய்ப்பு பெற்றோர்களுக்கு கிடைத்துள்ளது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கூடுதல் ஆட்சியரை சுட்டிகாட்டி கடந்து வந்து பாதைகளை சில கதைகளின் மூலம் அறிவுரை வழங்கினார்.
அதை பின்பற்றும் வகையில் மாணவர்கள் மத்தியில் கேள்வி பதிலாக கிணற்றின் ஆழம் எவ்வளவு என்று ஏழுப்பியதற்கு 6ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹரி பதிலுரை வழங்கினான். இது போன்ற திறமையை ஒவ்வொருவரும் வளர்த்து கொள்ள வேண்டும். ஒரு கிராமத்தில் 13வயதுள்ள அண்ணன் எதிர்பாராத வகையில் கிணற்றில் விழுந்தவரை 7வயது சிறுவன் காப்பாற்றினான். ஊர் கூட்டத்தில் சிறுவனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இருந்த போதும் 7வயது சிறுவனால் முடியுமா? என்ற அச்சம் இருந்தபோது முடியாது என்று எதுவும் கிடையாது.
ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒருவகையில் தனித்திறமை உண்டு. அதை அடைவதற்கும் இலக்கை நோக்கி நிர்ணயம் செய்து வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்றவற்றில் தேசிய அளவில் நாமும் வெற்றி பெற வேண்டும் என்ற கனவோடு படிக்க வேண்டும்.
அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்வில் 6லட்சம் பேர் கலந்து கொண்டால் அதில் 180 பேர் தேர்ச்சியடைகிறார்கள். பள்ளி பருவத்தில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அறிவரைகளை கேட்டு நல்ல முறையில் படித்து தங்களது திறமையின் மூலம் இந்த நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்.
பிள்ளைகளை தரம் பிரித்து பெற்றோர்கள் பேச கூடாது என்று அறிவுரை வழங்கினார்.
பின்னர் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் அறிவுத்திறன் வளர்க்கும் வகையில் பேச்சு போட்டிகளும் நடைபெற்றன.
இவ்விழாவில், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியாக, ஆசிரியர் காளீஸ்வரி நன்றியுரையாற்றினார்.